Loading...

ABOUT Us

அனைவருக்கும் வணக்கம்.

"தேன்குழலி மண்பொருளகம்" பழமையை மீட்டெடுப்போம் ஆரோக்கியம் காப்போம் என்ற உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.மண்ணால் செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு சங்ககாலத்தில் இருந்தே தொடங்குகிறது.அகழாய்வுகளில் கிடைக்கும் பானைஓடுகளும் மற்றும் முதுமக்கள் தாழிகள் போன்றவை இதற்குச் சான்றாகும்.

அதிக அளவில் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே பயன்படுத்தியதால் அக்கால மக்களின் ஆரோக்கியம் காக்கப்பட்டது. நோயின்றி நீண்ட நாட்கள் வாழ்ந்தனர். தொழில்நுட்ப வளர்ச்சி, நேரமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் வீடுகளில் சமைத்து உண்பதே இக்காலத்தில் பெரும் சவாலாகவே உள்ளது. அடுப்படியில் கூடுதலாக அரைமணிநேரம் நாம் செலவு செய்தால் மருத்துவமனைகளில் மணிக்கணக்கில் காத்திருக்கும் தேவை ஏற்படாது. மண்பாண்டங்கள் செய்தல் எங்களுக்குக் குலத்தொழில். இன்றுவரை நாங்கள் மண்ணால் செய்யப்பட்ட பொருட்களையே எங்கள் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்துகிறோம்.

அதனால் எங்களுடைய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.வியாபாரம் என்பதைத் தாண்டி "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கோடு தேன்குழலி மண்பொருளகம் உருவாக்கப்பட்டுள்ளது.மண்ணால் செய்யப்பட்ட அனைத்து விதமான பொருட்களும் எங்களிடம் கிடைக்கும். அனைவரும் வாங்கி பயன்படுத்தினால் பழமையை மீட்டெடுப்பதுடன் ஆரோக்கியமும் காக்கப்படும். நோயற்ற வாழ்வே! குறைவற்ற செல்வம்!.

1.மண்ணில் பிறந்த பாரம்பரியம், தலைமுறைகள் தாண்டும் பயன்

2.எங்கள் மண் பானைகள் – உங்கள் இல்லத்தின் ஆரோக்கிய நண்பன்

3.பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒரு சிறிய முயற்சி

Contact Us